×

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்பணிப்பு செய்யும் விழாவை நேற்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் ₹254 கோடியே 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இருந்து நேற்று திறந்து வைத்தார்.

இதை தொடர்ந்து நாகப்பட்டினம் அருகே ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் சேர்க்கைக்கான அனுமதி சீட்டை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எம்பி செல்வராசு ஆகியோர் வழங்கினர். இதை தொடர்ந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கை வசதி கொண்ட அறை, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது தாட்கோ தலைவர் மதிவாணன், நாகப்பட்டினம் எம்எல்ஏ முகம்மது ஷா நவாஸ், நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்நாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதவது:
நாகப்பட்டினம் அருகே ஒரத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ₹254 கோடியே 80 லட்சம் மதிப்பில் 3 லட்சத்து 44 ஆயிரத்து 481 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும், முதல் தளத்தில் புறநோயாளிகள் பிரிவும், இரண்டாம் தளத்தில் மகப்பேறு பிரிவு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவும், மூன்றாம் தளத்தில் பொது மருத்துவ சிகிச்சை நான்காம் தளத்தில் பொது அறுவை சிகிச்சை மற்றும் குழந்தைகள் பிரிவும் ஐந்து மற்றும் ஆறாம் தளத்தில் பத்து அறுவை சிகிச்சை அரக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 10 லிப்ட் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் இந்த இடத்தில் மருத்துவமனைகள் அமைப்பதற்கு முன்பு குடிநீர் வசதி, மண் பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை. இதனால் மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடாமல் இருந்து வந்தது.

இதன் காரணத்தால் மருத்துவமனையை திறப்பதில் சிக்கல் நீடித்து வந்த நிலையில் முதல்வர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்கு வந்தது. மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் காணொலி காட்சி வாயிலாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சேவையை தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவில் நான் உட்பட பலர் கலந்து கொண்டு பெண்கள் விடுதி, செவிலியர் குடியிருப்பு, முதல்வர் குடியிருப்பு, நிலைய மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர் கட்டிடம் மற்றும் வங்கி, அஞ்சல் நிலையம் என அனைத்து சேவைகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது போல் தமிழ்நாட்டில் எண்ணற்ற மருத்துவ சேவைகளை முதல்வர் செய்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. Stalin ,Nagapattinam ,Chief Minister ,Tamil Nadu K. Nagapattinam Government Medical College Hospital ,Stalin ,Government Medical College Hospital ,Oratur ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று...